தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ்-க்கு கொரோனா தொற்று உறுதி


தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ்-க்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 19 April 2021 3:43 PM GMT (Updated: 19 April 2021 3:43 PM GMT)

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கானா,

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை தன் கோர முகத்தைக்காட்டி வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சம் காண்கிற வகையில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. விழிப்புணர்வு பிரசாரம், தடுப்பூசி திட்டம் என பல உத்திகள் வகுத்து தொற்று பரவலை தடுக்க முயற்சித்தபோதும், எதற்கும் கட்டுப்படாமல் பரவல் அதிகரித்துக்கொண்டே போகிறது.

இந்த வைரஸ் தொற்றால் மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவரும் அம்மாநில முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் உள்ளதால் அவரை தனிமைபடுத்திக்கொள்ளுமாறு டாக்டர் அறிவுரை வழங்கியுள்ளனர். மேலும் மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.

Next Story