தேசிய செய்திகள்

டெல்லியை உலுக்கும் கொரோனா; மேலும் 23, 686- பேருக்கு கொரோனா + "||" + Delhi reports 23,686 fresh COVID-19 cases (positivity rate - 26.12%), 21,500 recoveries, and 240 deaths in the last 24 hours

டெல்லியை உலுக்கும் கொரோனா; மேலும் 23, 686- பேருக்கு கொரோனா

டெல்லியை உலுக்கும் கொரோனா;  மேலும் 23, 686- பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 23,686- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தலைநகர் டெல்லியும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த டெல்லியில்  வரும் திங்கள் கிழமை வரை 6 நாட்கள் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 23,686- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 21,500- பேர் இன்று குணம் அடைந்துள்ளனர். 

கொரோனா பாதிப்பால் இன்று 240- பேர் உயிரிழந்துள்ளனர்.  டெல்லியில்  கொரோனா தொற்றுடன் 76 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால்  இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 12,361- ஆக உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. நாட்டின் முன்னணி மருத்துவர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை அவசர ஆலோசனை
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் முன்னணி மருத்துவர்கள், மருந்து நிறுவனங்களின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.
2. டெல்லி: காரில் பயணிக்கும் போது முக்கவசம் அணியுமாறு கூறிய போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தம்பதி கைது
டெல்லியில் காரில் பயணிக்கும்போது முக்கவசம் அணியுமாறு கூறிய போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
3. டெல்லியின் சுகாதார கட்டமைப்பு அதன் எல்லையை எட்டிவிட்டது - அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்
டெல்லி சுகாதாரத்துறை கட்டமைப்பு நிலைகுலைவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டியுள்ளது என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
4. கொரோனா: ஒட்டுமொத்தமாக குழப்பம் நிலவுகிறது; பாராளுமன்ற சிறப்புக்கூட்டம் கூட்ட வேண்டும் - சிவசேனா கோரிக்கை
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலால் ஒட்டுமொத்தமாக குழப்பம் நிலவி வருகிறது. நிலைமை குறித்து விவாதிக்க உடனடியாக பாராளுமன்றத்தில் சிறப்புக்கூட்டத்தொடர் கூட்டப்பட வேண்டும் என்று சிவசேனா கோரிக்கை விடுத்துள்ளது.
5. தனிமையில் இருக்கும்போது முகக்கவசம் அணியச்சொல்வதா? - போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தம்பதி
காரில் தனிமை பயணத்தில் இருக்கும்போது போது முக்கவசம் அணியச்சொல்வதா? என்று போலீசாருடன் தம்பதி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.