டெல்லி: கொரோனா பாதிப்பால் நீதிபதி உயிரிழப்பு


டெல்லி: கொரோனா பாதிப்பால் நீதிபதி உயிரிழப்பு
x
தினத்தந்தி 20 April 2021 3:52 AM GMT (Updated: 20 April 2021 3:52 AM GMT)

டெல்லியில் கொரோனா வைரசால் பாதிப்பட்ட நீதிமன்ற நீதிபதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

டெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பாதிப்பால் பொதுமக்கள், நீதித்துறையினர், அரசியல் கட்சியினர் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  

இதற்கிடையில், டெல்லியில் உள்ள மாவட்ட குடும்பநல நீதிமன்றத்தில் நீதிபதியாக செயல்பட்டு வந்தவர் கோவை வேனுகோபால். 47 வயதான நீதிபதி வேனுகோபாலுக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து, அவர் டெல்லி லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட நீதிபதி வேனுகோபால் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

நீதிபதிகள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அரசு முக்கியத்துவம் அளிக்காததே நீதிபதி வேனுகோபாலின் உயிரிழப்புக்கு காரணம் என்று நீதிமன்ற பார் அசோசியேசன் குற்றஞ்சாட்டியுள்ளது.   

Next Story