மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை இல்லை - முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார்


மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை இல்லை - முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார்
x
தினத்தந்தி 20 April 2021 3:42 PM GMT (Updated: 20 April 2021 3:42 PM GMT)

அரியானாவில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை இல்லை என்று அம்மாநில முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

அரியானா,

இந்தியாவில் தொடர்ந்து 40-வது நாளாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும், கடந்த 5 நாட்களாக 24 மணி நேர கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டி வருகிறது.

லட்சக்கணக்கில் தினந்தோறும் பாதிக்கப்படும் நோயாளிகளை அனுமதிக்க முடியாமல் மருத்துவமனைகள் திக்குமுக்காடுகின்றன. உள்ளே அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் போன்றவற்றின் தட்டுப்பாட்டால் பல மாநிலங்களில் மருத்துவமனை நிர்வாகங்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றன.

கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இரவு நேர ஊரடங்கு, வார இறுதி பொது முடக்கம், மக்கள் இயங்குவதற்கு தடை என பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொரோனாவுக்கும், மக்களுக்குமான இடைவெளியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், அரியானாவில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை இல்லை என்று அம்மாநில முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், மாநிலத்தில் முழுவதும் கொரோனா தொற்று சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 45,000 ஐ தாண்டியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். மேலும் மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை இல்லை என்று கூறினார்.

Next Story