கர்நாடகத்தில் 1,970 போக்குவரத்து ஊழியர்கள் பணி நீக்கம்; கே.எஸ்.ஆர்.டி.சி. தகவல்


கர்நாடகத்தில் 1,970 போக்குவரத்து ஊழியர்கள் பணி நீக்கம்;  கே.எஸ்.ஆர்.டி.சி. தகவல்
x
தினத்தந்தி 20 April 2021 9:23 PM GMT (Updated: 20 April 2021 9:23 PM GMT)

கர்நாடகத்தில் 1,970 போக்குவரத்து ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக, கே.எஸ்.ஆர்.டி.சி. கூறியுள்ளது.

பெங்களூரு:

  கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

1,970 பேர் பணி நீக்கம்

  கர்நாடகத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த 8-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கே.எஸ்.ஆர்.டி.சி. ஊழியர்கள் 4 ஆயிரத்து 35 பேர், பி.எம்.டி.சி. ஊழியர்கள் 3 ஆயிரத்து 255 பேர், வடகிழக்கு கர்நாடக சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் 281 பேர், வடமேற்கு கர்நாடக சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் 95 பேர் என 7 ஆயிரத்து 666 பேருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. 4 போக்குவரத்து கழகங்களிலும் 2,941 ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

  8-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை கே.எஸ்.ஆர்.டி.சி.யில் பணியாற்றிய 425 பேர், பி.எம்.டி.சி.யில் பணியாற்றிய 1,199 பேர், வடகிழக்கு கர்நாடக சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் 270 பேர், வடமேற்கு கர்நாடக சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் 76 பேர் என 1,970 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். 56 பேரின் பணி இடைநீக்கம் திரும்ப பெறப்பட்டு உள்ளது.

112 பேர் கைது

  8-ந் தேதி முதல் 20-ந் தேதி மாலை 6 மணி வரை 72 கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்களும், 6 பி.எம்.டி.சி. பஸ்களும், 23 வடகிழக்கு கர்நாடக சாலை போக்குவரத்து கழக பஸ்களும், 13 வடமேற்கு கர்நாடக சாலை போக்குவரத்து கழக பஸ்களும் என 114 பஸ்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. 

இதில் 4 போக்குவரத்து கழகங்களை சேர்ந்த 467 ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். அவர்களில் 112 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 206 பேர் மீது வழக்குப்பதிவு ஆகி உள்ளது.
  இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Next Story