மேற்கு வங்காளத்தில் ரெயில் டிரைவர்கள் 90 பேருக்கு கொரோனா: 56 ரெயில்கள் ரத்து


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 21 April 2021 2:23 AM GMT (Updated: 21 April 2021 2:23 AM GMT)

மேற்கு வங்காளத்தில் ரெயில் டிரைவர்கள் 90 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதால், 56 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

கொல்கத்தா, 

கிழக்கு ரெயில்வே மண்டலத்தில் ரெயில் என்ஜின் டிரைவர்கள், கார்டுகளுக்கு கொரோனா பரிசோதனை செய்தது. அப்போது மேற்கு வங்காளத்தின் சியல்டா பிரிவு ரெயில்வேயில் 90 டிரைவர்கள், கார்டுகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் இயக்கப்பட்ட 56 மின்சார ரெயில் சேவைகள் நேற்று முதல் ரத்து செய்யப்பட்டன.

மேற்கு வங்காளத்தில் புறநகர் ரெயில்சேவை ஊரடங்கிற்குப் பிறகு நவம்பர் 11 முதல்தான் செயல்பட ஆரம்பித்தன, தற்போது 7 மாத இடைவெளியில் மீண்டும் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கிழக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் எக்லபியா சக்ரவர்த்தி தெரிவிக்கையில், “நிலைமை மிகவும் மோசமானது. கொரோனா காரணமாக சுமார் 90 ஓட்டுநர்கள் மற்றும் காவலர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அஞ்சல் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக 56 உள்ளூர் ரயில்களை ரத்து செய்துள்ளோம். முடிந்தவரை, பயணிகளுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்க, பயன்பாடு குறைவான நேரத்தில் உள்ள ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன” என்று அவர் தெரிவித்தார்.

Next Story