கொரோனா காரணமாக யு.ஜி.சி. ‘நெட்’ தேர்வு தள்ளிவைப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 21 April 2021 3:20 AM GMT (Updated: 21 April 2021 3:20 AM GMT)

கொரோனா காரணமாக யு.ஜி.சி. ‘நெட்’ தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.

புதுடெல்லி, 

முதுநிலை படிப்பு முடித்தோர், கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, 'யு.ஜி.சி., - நெட்' எனப்படும், தேசிய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு, வருகிற மே மாதம் 2-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில், நாட்டின் தற்போதைய கொரோனா சூழலைக் கருத்தில்கொண்டு, இத்தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் நேற்று அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து என்.டி.ஏ. (தேசிய டெஸ்டிங் ஏஜென்சி) வெளியிட்டுள்ள அறிவிப்பில், யு.ஜி.சி.-நெட் தேர்வு தள்ளிவைக்கப்படுவதாகவும், மாற்றுத் தேதி, தேர்வு தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Next Story