தேசிய செய்திகள்

தடுப்பூசியின் விலை நிர்ணயத்தில் வேறுபாடு - ராகுல் காந்தி + "||" + Difference in vaccination pricing - Rahul Gandhi

தடுப்பூசியின் விலை நிர்ணயத்தில் வேறுபாடு - ராகுல் காந்தி

தடுப்பூசியின் விலை நிர்ணயத்தில் வேறுபாடு - ராகுல் காந்தி
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசியின் விலை நிர்ணயத்தில் வேறுபாடு இருப்பதை காங்கிரஸ் ராகுல் காந்தி சாடியுள்ளார்.
புதுடெல்லி,

சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசியில் 50 சதவிகிதம் மத்திய அரசுக்கும், மீதமுள்ள 50 சதவிகிதம் மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாநில அரசுகளுக்கு வழங்கும் தடுப்பூசிகான விலை கடுமையாக உயர்த்தப்பட்டு ரூ. 400 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசிக்கான விலை ரூ. 600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சீரம் இன்ஸ்டிடியூட்டின் விலை அறிவிப்பு அறிக்கையைப் பகிர்ந்து டுவிட்டரில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளது:

"நாட்டின் பேரழிவு, மோடியின் நண்பர்களுக்கான வாய்ப்பு. மத்திய அரசின் அநீதி. இந்தப் பதிவுடன் தடுப்பூசியில் பாகுபாடு என்ற ஹேஷ்டேக்கையும் அவர் இணைத்துள்ளார்.

தடுப்பூசி குறித்த இதற்கு முந்தையப் பதிவில்,

"மத்திய அரசின் கரோனா தடுப்பூசி திட்டம் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எந்த வகையிலும் சளைத்தது அல்ல. பொது மக்கள் வரிசையில் நிற்பார்கள், நிறைய பணத்தையும், உடல்நலத்தையும், வாழ்க்கையையும் தொலைப்பார்கள். இறுதியில் சில தொழிலதிபர்கள் மட்டுமே பயனடைவார்கள் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மக்களின் நலன் மீது கவனம் செலுத்த வேண்டும் : மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்
மத்திய விஸ்டா திட்டத்துக்கு செலவிடுதை விட மக்கள் மீது கவனம் செலுத்துங்க்ள் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
2. கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு: ராகுல் காந்தி
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
3. கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட வேண்டும் : ராகுல் காந்தி
நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
4. அரசியல் பணியை ஒதுக்கிவைத்து மக்களுக்கு உதவுங்கள்; காங். தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்
அரசியல் பணியை ஒதுக்கி வைத்து விட்டு மக்களுக்கு உதவுமாறு காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5. இனிவரும் நாட்களில் கொரோனாவால் சிக்கல் இன்னும் தீவிரமாகும்: ராகுல் காந்தி
நாட்டில் கொரோனா தொற்று பரவல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள சூழலில், மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.