நமது மக்கள் உயிரிழக்கும்போது ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வது குற்றச்செயல் - ராகுல்காந்தி விமர்சனம்


நமது மக்கள் உயிரிழக்கும்போது ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வது குற்றச்செயல் - ராகுல்காந்தி விமர்சனம்
x
தினத்தந்தி 22 April 2021 2:47 AM GMT (Updated: 22 April 2021 2:47 AM GMT)

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் இந்தியாவிடம் தற்போதுவரை எந்த திட்டமும் இல்லை என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் தொடங்கிய கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி, முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதைத்தொடர்ந்து, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.

இதனிடையே, நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகரித்து வரும் நிலையில், மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, மே 1-ம் தேதியிலிருந்து தடுப்பூசி நிறுவனங்களிடமிருந்து தடுப்பூசிகளை நேரடியாக வாங்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் இந்தியாவிடம் தற்போதுவரை எந்த திட்டமும் இல்லை என்று மத்திய அரசு மீது ராகுல்காந்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் தற்போதுவரை இந்தியாவிடம் எந்தவித செயல் திட்டமும் இல்லை. நமது மக்கள் உயிரிழக்கும்போது ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குற்றச்செயலை தவிர வேறொன்றுமில்லை’ என்றார்.



Next Story