பிரதமர் மோடி எந்த அடிப்படையில் ஊரடங்கை தவிர்க்குமாறு கூறுகிறார்? சிவசேனா கேள்வி


பிரதமர் மோடி எந்த அடிப்படையில் ஊரடங்கை தவிர்க்குமாறு கூறுகிறார்? சிவசேனா கேள்வி
x
தினத்தந்தி 23 April 2021 12:20 AM GMT (Updated: 23 April 2021 12:20 AM GMT)

பிரதமர் மோடி எந்த அடிப்படையில் ஊரடங்கை தவிர்க்குமாறு கூறுகிறார்? என சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.

சிவசேனா கேள்வி

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு தலைவிரித்தாடுகிறது. எனவே மாநிலத்தில் ஊரடங்கு போல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நகரங்கள், மாவட்டகளுக்கு இடையேயான பயணத்திற்கு கூட தடைவிதித்து உள்ளது. இந்தநிலையில் சமீபத்தில் நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, மாநிலங்கள் ஊரடங்கை கடைசி வாய்ப்பாக தான் பயன்படுத்த வேண்டும் என கூறியிருந்தார்.

இந்தநிலையில் சிவசேனா கட்சி, பிரதமர் மோடி எந்த அடிப்படையில் ஊரடங்கை தவிர்க்குமாறு கூறுகிறார்? என கேள்வி எழுப்பி உள்ளது.

முன்னேற்றம் இல்லை

இது குறித்து அக்கட்சி பத்திரிக்கையான சாம்னாவில் கூறியிருப்பதாவது:-

குறைந்தது மாநிலத்தில் 15 நாட்களாவது கடுமையான ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என மராட்டிய மந்திரிகள் பரிந்துரை செய்து உள்ளனர். முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க உள்ளார். ஆனால் எந்த அடிப்படையில் பிரதமர் மோடி ஊரடங்கை தவிர்க்குமாறு அறிவுறுத்தினார்?.

டெல்லி, குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நிலைமை கைமீறி போய் உள்ளது. குஜராத்தில் 2 வாரம் ஊடரங்கை அமல்படுத்த இந்திய மருத்துவ சங்கம் கோரி உள்ளது.. மராட்டியத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ள போதும் எந்த முன்னேற்றமும் இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story