தேசிய செய்திகள்

முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் மீது மற்றொரு விசாரணை; மராட்டிய மாநில அரசு உத்தரவு + "||" + Another inquiry into former Maharashtra police commissioner Parambir Singh; Maharashtra State Government Order

முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் மீது மற்றொரு விசாரணை; மராட்டிய மாநில அரசு உத்தரவு

முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் மீது மற்றொரு விசாரணை; மராட்டிய மாநில அரசு உத்தரவு
முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் மீது மற்றொரு விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கார் வெடிகுண்டு வழக்கு

பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் வீடு அருகே வெடிகுண்டு கார் நிறுத்தப்பட்ட வழக்கை தவறாக கையாண்டதாக மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் ஊர்க்காவல் படைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து அவர் உள்துறை மந்திரியாக இருந்த அனில் தேஷ்முக் மும்பை போலீசாரை ஓட்டல், பார்களில் இருந்து மாதந்தோறும் ரூ.100 கோடி வசூலிக்க கட்டாயப்படுத்தியதாக முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதினார்.

இந்த குற்றச்சாட்டை அடுத்து அனில் தேஷ்முக் பதவியை ராஜினாமா செய்தார்.

விசாரணைக்கு உத்தரவு

இந்தநிலையில் முன்னாள் கமிஷனர் பரம்பீர் சிங் மீது இன்ஸ்பெக்டர் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டை தொிவித்து இருந்தார். அதில் அவர், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தன்னை மீண்டும் பணியில் சேர்க்க பரம்பீர் சிங் ரூ.2 கோடி லஞ்சம் கேட்டதாக கூறியிருந்தார். இந்த புகார் குறித்து டி.ஜி.பி. சஞ்சய் பாண்டே விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே கார் வெடிகுண்டு வழக்கு விசாரணையை தவறான பாதைக்கு கொண்டு சென்ற விவகாரம் குறித்து பரம்பீர் சிங் மீது விசாரணை நடத்த மாநில உள்துறை உத்தரவிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. பீகாரில் பணிநேரத்தில் கொரோனா வார்டில் இல்லாத 17 டாக்டர்கள்; விளக்கம் அளிக்க உத்தரவு
பீகாரில் பணிநேரத்தில் கொரோனா சிகிச்சை வார்டில் இல்லாத 17 டாக்டர்களிடம் விளக்கம் கேட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
2. புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிகளில் தீத்தடுப்பு நடவடிக்கைகள்; கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு
புதுவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் தீத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
3. மராத்தா பிரிவினருக்கு வழங்கிய இடஒதுக்கீடு ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
மராத்தா சமூகத்தினருக்கு மராட்டிய அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டது.
4. போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக குற்றச்சாட்டு: பேராசிரியருக்கு எதிரான விசாரணையை தினமும் நடத்த வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக இணைப் பேராசிரியர் மீதான குற்றச்சாட்டு விசாரணையை தினந்தோறும் நடத்தவேண்டும் என்று திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5. கொரோனா ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகளை கண்காணிக்க தமிழகம் முழுவதும் 10 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம் போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு
கொரோனா ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகளை கண்காணிக்க தமிழகம் முழுவதும் 10 ஐ.பி.எஸ். அதிகாரிகளை போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி நியமித்துள்ளார்.