நெல்லையில் போராட்டம் எதிரொலி: 4 மாவட்ட போலீசார் குவிப்பு


நெல்லையில் போராட்டம் எதிரொலி: 4 மாவட்ட போலீசார் குவிப்பு
x
தினத்தந்தி 23 April 2021 8:36 PM GMT (Updated: 23 April 2021 8:36 PM GMT)

நெல்லையில் போராட்டம் நடந்ததன் எதிரொலியாக பாதுகாப்புக்காக 4 மாவட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

நெல்லை:
நெல்லையில் நேற்று 2 இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரியில் கோவில் பூசாரி சிதம்பரம் கொலை சம்பவத்தை கண்டித்து நேற்று தெற்கு பஜாரில் போராட்டம் நடைபெற்றது. இதேபோல் பாளையங்கோட்டை மத்திய சிறையில் முத்து மனோ என்ற வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் சிறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதையொட்டி நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த போலீசார் நெல்லைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பாளையங்கோட்டை தெற்கு பஜார், மத்திய சிறைச்சாலை, நெல்லை கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த பணிகளை நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநவு மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கண்காணித்தனர்.

Next Story