ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக பிரதமரிடம் தெரிவித்த கருத்துகளை கெஜ்ரிவால் வெளியிட்டதால் சர்ச்சை


ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக பிரதமரிடம் தெரிவித்த கருத்துகளை கெஜ்ரிவால் வெளியிட்டதால் சர்ச்சை
x
தினத்தந்தி 23 April 2021 9:05 PM GMT (Updated: 23 April 2021 9:05 PM GMT)

நாட்டில் கொரோனா 2-வது அலை தீவிரம் பெற்றுவரும் நிலையில், நேற்று பிரதமர் மோடி, கொரோனா பரவல் அதிகமாக உள்ள 10 மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அதில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் பங்கேற்றார்.

அப்போது கெஜ்ரிவால், ‘ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் மிகுந்த வலியில் உள்ளனர். இதனால் ஏதேனும் பெரிய சோகம் நேர்ந்தால் நம்மை நாமே மன்னிக்க முடியாது. அனைத்து ஆக்சிஜன் தொழிற்சாலைகளையும் ராணுவ பொறுப்பில் எடுத்துக்கொள்ள வேண்டும். தலைநகர் டெல்லிக்கு ஆக்சிஜன் டேங்கர்கள் சீராக வருவதை உறுதிப்படுத்தும்படி அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கும் பிரதமர் அறிவுறுத்த வேண்டும்’ என்றார்.

இதுபோல அவர் முன்வைத்த கருத்துகளை பொதுவெளியில் வெளியிட்டிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.அதுகுறித்து கருத்துக் கூறிய மத்திய அரசு அதிகாரிகள், கெஜ்ரிவால் இந்த விஷயத்தில் அரசியல் செய்வதாகவும், பிரதமர் உடனான தனிப்பட்ட உரையாடலை வௌியிட்டுவிட்டதாகவும் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறுகையில், ‘விமானம் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் கொண்டுவர மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளதை அறியாமலே அதற்கு கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். 

ரெயில்வே மூலம் ஆக்சிஜன் கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அதுதொடர்பாக ரெயில்வே அமைச்சகத்திடம் அவர் எதுவும் தெரிவிக்கவில்லை’ என்றனர்.

Next Story