உலக அளவில் மிக விரைவாக கொரோனா தடுப்பூசிகளை போட்ட நாடு இந்தியா


உலக அளவில் மிக விரைவாக கொரோனா தடுப்பூசிகளை போட்ட நாடு இந்தியா
x
தினத்தந்தி 24 April 2021 7:35 PM GMT (Updated: 24 April 2021 7:35 PM GMT)

இந்தியாவில் 99 நாட்களில் 14 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டு உள்ளன என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் தொடர்ந்து 3வது நாளாக 3 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு பதிவானது.  ஒரே நாளில் 3 லட்சத்து 46 ஆயிரத்து 786 பேருக்கு கொரோனா உறுதியானது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 2,264 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்புகளை தடுக்க நாட்டில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.  இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ஏப்ரல் 24ந்தேதியன்று இரவு 8 மணி வரையில் 24 லட்சத்திற்கும் கூடுதலான கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.

இதனால், நாட்டில் மொத்தம் 14 கோடியே 8 லட்சத்து 2 ஆயிரத்து 794 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.  இந்தியாவில் 99 நாட்களில் 14 கோடிக்கும் கூடுதலான கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.

அவர்களில், சுகாதார பணியாளர்களில் 92,89,621 பேர் முதல் டோசும், 59,94,401 பேர் 2வது டோசும் எடுத்து கொண்டுள்ளனர்.  முன்கள பணியாளர்களில் 1,19,42,233 பேர் முதல் டோசும், 62,77,797 பேர் 2வது டோசும் எடுத்து கொண்டுள்ளனர்.

45 முதல் 60 வயதுக்கு உட்பட்டோரில் 4,76,41,992 பேருக்கு முதல் டோசும், 23,22,480 பேருக்கு 2வது டோசும் போடப்பட்டு உள்ளன.  60 வயதுக்கு மேற்பட்டோரில் 4,96,32,245 பேருக்கு முதல் டோசும், 77,02,025 பேருக்கு 2வது டோசும் போடப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.

நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் விகிதம் சரிந்து 1.14 சதவீதம் என்ற அளவில் உள்ளது என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்து உள்ளது.




Next Story