காஷ்மீர் எல்லைக்குள் டிரோன்கள் மூலம் ஆயுதங்கள் போட பாகிஸ்தான் முயற்சி; எல்லை பாதுகாப்பு படையினர் முறியடித்தனர்


காஷ்மீர் எல்லைக்குள் டிரோன்கள் மூலம் ஆயுதங்கள் போட பாகிஸ்தான் முயற்சி; எல்லை பாதுகாப்பு படையினர் முறியடித்தனர்
x
தினத்தந்தி 24 April 2021 9:34 PM GMT (Updated: 24 April 2021 9:34 PM GMT)

காஷ்மீர் எல்லையில் அமலில் இருக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை வலுவாக கடைப்பிடிப்பது என கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒத்துக்கொண்டன.

இதைத்தொடர்ந்து அங்கு பெரும்பாலும் அமைதி நீடித்து வருகிறது.ஆனால் இந்த சூழலில், இந்திய பகுதிக்குள் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகளுக்கு ஆளில்லா குட்டி விமானங்கள் (டிரோன்) மூலம் ஆயுதங்கள், போதைப்பொருட்கள் போன்றவற்றை போட்டுச்செல்லும் பணிகளை பாகிஸ்தான் தொடங்கி இருக்கிறது.

அந்த வகையில் நேற்று அதிகாலையில் ஜம்முவின் ஆர்னியா செக்டாருக்கு உட்பட்ட ஜப்போவால் மற்றும் விக்ரம் எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் எல்லையில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் 2 டிரோன்கள் இந்திய பகுதிக்குள் நுழைவதை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். உடனே அந்த விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்காக இந்திய வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். உடனே அந்த ஆளில்லா விமானங்கள் மீண்டும் தாங்கள் வந்த இடத்துக்கே திரும்பி சென்றன. இதன் மூலம் பாகிஸ்தானின் முயற்சி முறியடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் ஜம்மு எல்லையில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

 


Next Story