உத்தரபிரதேசத்தில் எந்தவொரு மருத்துவமனையிலும் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை இல்லை - முதல்வர் யோகி ஆதித்யநாத்


உத்தரபிரதேசத்தில் எந்தவொரு மருத்துவமனையிலும் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை இல்லை - முதல்வர் யோகி ஆதித்யநாத்
x
தினத்தந்தி 25 April 2021 11:53 AM GMT (Updated: 25 April 2021 11:53 AM GMT)

உத்தர பிரதேசத்தில் எந்தவொரு கொரோனா மருத்துவமனையிலும் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை இல்லை என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.



உத்தர பிரதேசத்தில் எந்தவொரு கொரோனா மருத்துவமனையிலும் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை இல்லை - முதல்வர் யோகி ஆதித்யநாத்

லக்னோ, 

கொரோனா வைரஸ் என்ற கொலைகார வைரசின் கோரப்பிடியில் சிக்கி நாடு தத்தளித்து கொண்டிருக்கிறது. மராட்டியம், கேரளா, டெல்லி, கர்நாடகம், சத்தீஷ்கார் என 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக் கானோர் கொரோனாவின் கோரப்பிடிக்கு ஆளாகி வருகின்றனர்.

முதல் அலையை வெற்றிகரமாக சமாளித்த இந்தியா, இரண்டாவது அலையை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. கொரோனாவின் மோசமான பிடியில் சிக்கியுள்ள பல மாநிலங்களில் நோயாளிகளின் பெருக்கத்தால் படுக்கைகள் பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை, ரெம்டெசிவிர் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் எந்த கொரோனா மருத்துவமனையிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

இது குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:-

மாநிலத்தின் எந்தவொரு கொரோனா மருத்துவமனையிலும் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை இல்லை.ஐ.ஐ.டி கான்பூர், ஐ.ஐ.எம் ஆக்ரா மற்றும் ஐஐடி பிஹெச்யு போன்ற நிறுவனங்களுடன் இணைந்து மாநிலத்தின் ஆக்சிஜன் தேவை, வழங்கல் மற்றும் விநியோகத்தை முறையாக கண்காணித்து வருகிறோம். அதனால் தற்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை. 

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நோயாளிக்கும் ஆக்சிஜன் தேவையில்லை. தேவைப்படுபவர்கள் மட்டுமே அதைப் பயன்படுத்துகிறார்கள். இது குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதில் ஊடகங்களின் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தில் மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் சில ஆரம்பகட்ட சிக்கல்கள் இருந்தது. ஆனால் அவை விரைவாக சரிசெய்யப்பட்டன. 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story