ஒடிசாவில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் என அறிவிப்பு


ஒடிசாவில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் என அறிவிப்பு
x
தினத்தந்தி 25 April 2021 6:11 PM GMT (Updated: 25 April 2021 6:11 PM GMT)

ஒடிசாவில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்ட ஒவ்வொருவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என முதல் மந்திரி அறிவித்துள்ளார்.

கட்டாக்,

ஒடிசாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.01 லட்சம் ஆக உயர்ந்து உள்ளது.  எனினும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.59 லட்சம் என்ற அளவில் உள்ளது.  1,981 பேர் பாதிப்புகளால் உயிரிழந்து உள்ளனர்.

கொரோனா பாதிப்புகளை குறைக்க நாட்டில் கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன.  எனினும், பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை என்ற நிலை காணப்பட்டது.

இதனால், முதல் டோஸ் எடுத்து கொண்டவர்கள், 2வது டோஸ் கிடைக்காமல் திணறி வந்தனர்.  இதனிடையே, உள்நாட்டு உற்பத்தி தடுப்பூசிகளான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு விலை அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில், ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்னாயக் இன்றிரவு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநிலத்தில் 18 முதல் 44 வயது வரையிலான ஒவ்வொருவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவச அடிப்படையில் போடப்படும் என அறிவித்துள்ளார்.  வருகிற மே 1ந்தேதி முதல் நாட்டில் 18 வயது பூர்த்தியான ஒவ்வொருவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.


Next Story