5 மாநில வாக்குஎண்ணிக்கை :மே - 2 வெற்றி கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை


5 மாநில வாக்குஎண்ணிக்கை :மே - 2 வெற்றி கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம்  தடை
x
தினத்தந்தி 27 April 2021 5:40 AM GMT (Updated: 27 April 2021 5:40 AM GMT)

மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போதும், தேர்தல் முடிவுக்குப் பின்னரும் வெற்றிக் கொண்டாட்டங்களுக்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

புதுடெல்லி

2 வது அலை கொரோனா பரவ தேர்தல் ஆணையமே காரணம் என்று சென்னை ஐகோர்ட்  நேரடியாக நேற்று குற்றம்சாட்டி இருந்தது. 

இந்த நிலையில், தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்காளம், அசாம் உள்பட 5 மாநிலங்களிலும் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. அன்றைய தினம் ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் வெற்றியைக் கொண்டாடதேர்தல் ஆணையம்  தடை விதித்துள்ளது.   தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மே 2-ல் வாக்கு எண்ணும் போது முன்னிலை விவரங்கள் வெளியாகும். முன்னிலை விவரங்கள் வெளியிடும் போதும், வெற்றி விவரம்  வெளியாகும் போதும், அதனைக் கொண்டாட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

Next Story