தேசிய செய்திகள்

குஜரத்தில் வரும் 28-ஆம் தேதி முதல் அனைத்து நகரங்களிலும் இரவு நேர ஊரடங்கு + "||" + Gujarat govt announces night curfew in all cities from April 28, here's what you should know

குஜரத்தில் வரும் 28-ஆம் தேதி முதல் அனைத்து நகரங்களிலும் இரவு நேர ஊரடங்கு

குஜரத்தில் வரும் 28-ஆம் தேதி முதல் அனைத்து நகரங்களிலும் இரவு நேர ஊரடங்கு
குஜராத்தில் வரும் 28 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
காந்திநகர்,

கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கணக்கில் கொண்டு குஜராத்தில் வரும் 28-ஆம் தேதி மே 5- ஆம் தேதி வரை  மாநிலம் முழுவதும் உள்ள 29 நகரங்களில்  இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல் மந்திரி விஜய் ரூபானி அறிவித்துள்ளார்.  இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்க்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 முன்னதாக குஜராத்தில் உள்ள 20 பெரு நகரங்களில் மட்டும் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அதேபோல், மாநிலம் முழுவதும் மத தலங்களில் மக்களுக்கு அனுமதி கிடையாது. பூஜைகள் செய்ய மட்டுமே அனுமதி உண்டு. 

பொது போக்குவரத்து 50 சதவீத பயணிகளுடன் மட்டுமே இயக்க வேண்டும். திருமண நிகழ்ச்சிகளில் 50 பேரும் இறுதி சடங்கு நிகழ்வுகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி உண்டு எனவும் குஜராத் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று சற்று குறைவு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 23 ஆயிரத்து 144- பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2. கர்நாடகாவில் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு: முதல் மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
கர்நாடகாவில் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல் மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
3. இந்தியாவில் நேற்று ஒருநாளில் மட்டும் 14.02 லட்சம் மாதிரிகள் பரிசோதனை
இந்தியாவில் கொரோனா பரவல் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தில் உள்ளது.
4. தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்
அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
5. தமிழகத்தில் 7 மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் முழு ஊரடங்கு: சாலைகள் வெறிச்சோடின
கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.