அடுத்த ஒரு மாதத்திற்குள் டெல்லியில் 44 ஆக்சிஜன் ஆலைகள் நிறுவப்படும் - முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்


அடுத்த ஒரு மாதத்திற்குள் டெல்லியில் 44 ஆக்சிஜன் ஆலைகள்  நிறுவப்படும் - முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
x
தினத்தந்தி 27 April 2021 11:40 AM GMT (Updated: 27 April 2021 11:40 AM GMT)

அடுத்த ஒரு மாதத்திற்குள் டெல்லியில் 44 ஆக்சிஜன் ஆலைகளை அமைக்க உள்ளோம் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.

புதுடெல்லி

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

அடுத்த ஒரு மாதத்திற்குள் டெல்லியில் 44 ஆக்சிஜன் ஆலைகளை அமைக்க உள்ளோம் - இவற்றில் 8 மத்திய அரசால் நிறுவப்படுகின்றன. மீதமுள்ள 36 டெல்லி அரசால் நிறுவப்படும்.

டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க, உடனடியாக ஆக்சிஜனை பயன்படுத்தும் விதத்தில் 21 கருவிகளை பிரான்சில் இருந்து இறக்குமதி செய்ய உள்ளோம்.

ஆக்சிஜன் தேவை இருக்கும் பல்வேறு மருத்துவமனைகளில் அந்த கருவிகள் நிறுவப்படும்.

அதே போன்று பாங்காக்கில் இருந்து 18 ஆக்சிஜன் டேங்கர்களை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளோம்.

அதனை கொண்டு வருவதற்கு விமானப் படை விமானங்களை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கவும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

கடந்த 4-5 நாட்களில் நாட்டின் பல தொழிலதிபர்களுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.நாங்கள் மிகப்பெரிய உதவிகள் கிடைத்து வருகிறது. பலரிடமிருந்து சலுகைகளைப் பெற்றுள்ளோம். டெல்லி அரசுக்கு உதவி செய்யும் அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன்.

டெல்லியில் கிட்டத்தட்ட அனைத்து ஐ.சி.யூ படுக்கைகளும் இப்போது நிரம்பி விட்டன. ஜிடிபி மருத்துவமனை மற்றும் பிரதான ராம்லீலா மைதானத்திற்கு அருகிலுள்ள மைதானத்தில் தலா 500 ஐசியு படுக்கைகள்,ராதா சோமி வளாகத்தில் 200 ஐசியு படுக்கைகள் தயார் ஆகி கொண்டிருக்கின்றன, எனவே, மே 10 ஆம் தேதிக்குள் சுமார் 1200 முறையான ஐசியு படுக்கைகள் தயாராக இருக்கும்.

Next Story