மராட்டிய மாநிலத்தில் இன்று முதல் ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி தொடங்க வாய்ப்பு - மத்திய மந்திரி நிதின் கட்காரி தகவல்


மராட்டிய மாநிலத்தில் இன்று முதல் ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி தொடங்க வாய்ப்பு - மத்திய மந்திரி நிதின் கட்காரி தகவல்
x
தினத்தந்தி 28 April 2021 2:25 AM GMT (Updated: 28 April 2021 2:25 AM GMT)

மராட்டிய மாநிலம் வார்தாவில் இன்று முதல் ரெம்டெசிவிர் உற்பத்தி தொடங்க வாய்ப்பு உள்ளதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.

மும்பை,

கொரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து நாடு முழுவதும் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மராட்டிய மாநிலம் வார்தாவில் ரெம்டெசிவிர் மருந்து தயாரிக்க ஜெனடெக் லைப்சைன்ஸ் என்ற நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி நேற்று நாக்பூரில் கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்து பேசினாா். அப்போது அவர் வார்தாவில் ஜெனடெக் லைப்சயின்ஸ் நிறுவனம் இன்று (புதன்கிழமை) முதல் ரெம்டெசிவிர் உற்பத்தியை தொடங்கும் என்றார்.

மேலும் அவர், ‘‘வார்தாவில் மருந்து தயாரிக்க ஐதராபாத்தில் இருந்து ஒரு குழு வந்து உள்ளது. ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. புதன்கிழமை (இன்று) முதல் மருந்து தயாரிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு தினந்தோறும் 30 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்து தயாரிக்கப்படும். இந்த மருந்து நாக்பூர் மற்றும் விதர்பாவில் உள்ள மற்ற மாவட்டங்களுக்கு சப்ளை செய்யப்படும்’’ என்றார்.

Next Story