தேசிய செய்திகள்

கோவாவில் நாளை மே 3 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிப்பு + "||" + Lockdown in Goa from tomorrow: Here is what is allowed and what's not

கோவாவில் நாளை மே 3 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிப்பு

கோவாவில் நாளை மே 3 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிப்பு
கோவாவில் நாளை இரவு முதல் மே 3 ஆம் தேதி காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
பானஜி,

கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பால் கோவா மாநிலத்தில்  29-ஆம் தேதி ( நாளை) முதல்  மே 3 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல் மந்திரி பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார். நாளை இரவு 7 மணி முதல் மே 3 ஆம் தேதி காலை வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஊரடங்கின் போது அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்படும். ஓட்டல்கள், பார்கள், ஆகியவை திறக்க அனுமதி இல்லை. பொது போக்குவரத்து முடக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் போக்குவரத்துக்கு  அனுமதி அளிக்கப்படும்” என கோவா முதல்வர் அறிவித்துள்ளார். 

கோவாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,110- ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். கோவாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 81,908- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,086- ஆக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு: துபாய் சாலைகளில் டிஜிட்டல் விளம்பர பலகைகளில், இந்தியாவுக்கு ஆதரவான வாசகம்
கொரோனா பாதிப்பால் திணறி வரும் இந்தியாவுக்கு ஆதரவாக துபாய் சாலைகளில் உள்ள டிஜிட்டல் விளம்பர பலகைகளில் (#ஸ்டே ஸ்ட்ராங் இந்தியா) என வாசகம் எழுதப்பட்டுள்ளது.
2. கொரோனா பாதிப்பு: இந்தியாவுக்கு நிதியுதவி அளித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பில் ரூ.7.5 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
3. ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
ராஜஸ்தானில் தனது மனைவியை தொடர்ந்து முதல் மந்திரி அசோக் கெலாட்டுக்கும் கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 6 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இன்று ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 6 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
5. நாடு முழுவதும் 14.78-கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன- மத்திய சுகாதரத்துறை அமைச்சகம்
நாடு முழுவதும் 14.78- கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.