இந்தியாவில் இதுவரை 14.78 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளன


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 28 April 2021 6:21 PM GMT (Updated: 28 April 2021 6:21 PM GMT)

இந்தியாவில் இதுவரை 14 கோடியே 78 லட்சத்து 27 ஆயிரத்து 367 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பரவல் ஒரு பக்கம் வேகம் எடுத்தாலும், மற்றொரு பக்கம் தடுப்பூசி போடுவதும் வேகம் பிடித்து வருகிறது. அந்த வகையில் இதுவரை நாட்டில் 14 கோடியே 78 லட்சத்து 27 ஆயிரத்து 367 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இது இன்று காலை 7 மணி நிலவரம் ஆகும்.

* சுகாதார பணியாளர்களில் 93 லட்சத்து 47 ஆயிரத்து 775 பேர் முதல் டோஸ், 61 லட்சத்து 6,237 பேர் இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்டுள்ளனர்.

* முன்களப்பணியாளர்களில் 1 கோடியே 22 லட்சத்து 21 ஆயிரத்து 975 பேர் முதல் டோசும், 65 லட்சத்து 26 ஆயிரத்து 378 பேர் இரண்டாவது டோசும் செலுத்திக்கொண்டுள்ளனர்.

* 60 வயதுக்கு மேற்பட்டோரில் 5 கோடியே 10 லட்சத்து 85 ஆயிரத்து 677 பேர் முதல் டோஸ், 93 லட்சத்து 37 ஆயிரத்து 292 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர்.

45-60 வயதினரில் 5 கோடியே 2 லட்சத்து 74 ஆயிரத்து 581 பேர் முதல் டோஸ், 29 லட்சத்து 27 ஆயிரத்து 452 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 67.26 சதவீதத்தினர் 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் 25 லட்சத்து 56 ஆயிரத்து 182 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் முதல் டோஸ் செலுத்திக்கொண்டவர்கள் 15 லட்சத்து 69 ஆயிரம் பேர். 9 லட்சத்து 87 ஆயிரத்து 182 பேர் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொண்டுள்ளனர்.

Next Story