மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 597.77 புள்ளிகள் உயர்வு


மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 597.77 புள்ளிகள் உயர்வு
x
தினத்தந்தி 29 April 2021 4:27 AM GMT (Updated: 29 April 2021 4:27 AM GMT)

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 597.77 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.

மும்பை,

கொரோனா பாதிப்புகளால் ஊரடங்கு, பொருளாதார முடக்கம் போன்றவற்றை நாடு சந்தித்து வருகிறது.  இந்த நிலையில், மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 597.77 புள்ளிகள் (1.14%) உயர்ந்து 50,331.61 புள்ளிகளாக காணப்பட்டது.  இதனால் இன்று 4வது நாளாக பங்குகள் ஏற்றமடைந்து லாபத்துடன் காணப்பட்டன.

இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 158.15 புள்ளிகள் (1.06%) உயர்ந்து 15,022.70 புள்ளிகளாக உள்ளது.  கொரோனா பாதிப்பின் 2வது அலையில் நாடு சிக்கி தவிக்கும் சூழலில், பங்குகள் விற்பனை லாபத்துடன் காணப்படுவது முதலீட்டாளர்களிடையே ஆறுதல் ஏற்படுத்தி உள்ளது.

இவற்றில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக லாபத்துடன் காணப்பட்டன.  இதனை தொடர்ந்து ஹிண்டால்கோ மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றின் பங்குகளும் லாபத்துடன் காணப்பட்டன.


Next Story