மாநிலங்களில் ஒரு கோடி டோஸ்கள் தடுப்பூசிகள் இருப்பு உள்ளது- மத்திய சுகாதார அமைச்சகம்


மாநிலங்களில் ஒரு கோடி டோஸ்கள் தடுப்பூசிகள்  இருப்பு உள்ளது- மத்திய சுகாதார அமைச்சகம்
x
தினத்தந்தி 29 April 2021 10:29 AM GMT (Updated: 29 April 2021 10:29 AM GMT)

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 16 கோடியே 16 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 16 கோடியே 16 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இவை அனைத்தும், இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மாநிலங்களில், தற்போது, ஒரு கோடி டோஸ்கள் தடுப்பூசி இருப்பு இருப்பதாகவும், அடுத்த 3 நாட்களுக்குள் மேலும் 20 லட்சம் தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட இருப்பதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக தமிழகத்துக்கு இதுவரை 65 லட்சத்து 28 ஆயிரத்து 950 டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் 8.83 சதவீதம் அளவுக்கு தடுப்பூசிகள் வீணாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வரை 62 லட்சத்து 97 ஆயிரத்து 671 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story