இமாச்சல பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை - முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தகவல்


இமாச்சல பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை - முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தகவல்
x
தினத்தந்தி 29 April 2021 6:25 PM GMT (Updated: 29 April 2021 6:25 PM GMT)

இமாச்சல பிரதேசத்தில் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை இல்லை என்று முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தகவல் தெரிவித்துள்ளார்.

சிம்லா,

கொரோனா வைரஸ் என்ற கொலைகார வைரசின் கோரப்பிடியில் சிக்கி நாடு தத்தளித்து கொண்டிருக்கிறது. மராட்டியம், கேரளா, டெல்லி, கர்நாடகம், சத்தீஷ்கார் என 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக் கானோர் கொரோனாவின் கோரப்பிடிக்கு ஆளாகி வருகின்றனர்.

முதல் அலையை வெற்றிகரமாக சமாளித்த இந்தியா, இரண்டாவது அலையை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. கொரோனாவின் மோசமான பிடியில் சிக்கியுள்ள பல மாநிலங்களில் நோயாளிகளின் பெருக்கத்தால் படுக்கைகள் பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை, ரெம்டெசிவிர் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவா மாநிலத்தில் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை இல்லை என அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் கூறியதாவது:-

மாநிலத்தில் ஆக்ஸிஜனுக்கு பற்றாக்குறை இல்லை. எங்களுக்கு ஆக்சிஜன் காலி சிலிண்டர்கள் தேவை. மத்திய அமைச்சர்கள் டாக்டர் ஹர்ஷ் வர்தன் மற்றும் பியூஷ் கோயலுடன் நான் இன்று பேசினேன், எங்களுக்கு 5000 டி-வகை & 3000 பி-வகை காலி சிலிண்டர்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டேன். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் செய்யப்படும். இதற்காக 1000 தடுப்பூசி மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம். 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story