கொரோனா தடுப்பு மருந்துக்கு ஜி.எஸ்.டி. வரியிலிருந்து விலக்கு அளிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்


கொரோனா தடுப்பு மருந்துக்கு ஜி.எஸ்.டி. வரியிலிருந்து விலக்கு அளிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
x
தினத்தந்தி 29 April 2021 7:50 PM GMT (Updated: 29 April 2021 7:50 PM GMT)

கொரோனா தடுப்பு மருந்துக்கு ஜி.எஸ்.டி. வரியிலிருந்து விலக்கு அளிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

ரெம்டெசிவர் போன்ற கொரோனா தடுப்பு மருந்து, கொரோனா மருத்துவ உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியிலிருந்து விலக்கு அளிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து பதிவு செய்த வழக்குடன் இந்த மனுவையும் சேர்த்து விசாரிக்க கோரி, ‘தி பப்ளிக் பாலிஸி’ வக்கீல்கள் என்ற அமைப்பு இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

அதில், ரெம்டெசிவர் போன்ற கொரோனா தடுப்பு மருந்து மீது 12 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. இதற்கான வரி விதிப்பு அளிக்கப்பட்டால் கொரோனா தடுப்பூசி மருந்துகளின் விலையும், வென்டிலேட்டர் போன்ற மருத்துவ உபகரணங்களின் விலையும் குறையும்.

கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் அத்தியாவசிய மருந்து பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. வரியை நீக்கி, மக்களைக் காப்பது சமூகநல அரசின் கடமையாகும். எனவே இதுதொடர்பாக மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுக்களின் மீதான விசாரணை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story