தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி நாளை போடப்படாது; கர்நாடக அரசு திடீர் அறிவிப்பு + "||" + The corona vaccine will not be given tomorrow; Government of Karnataka announcement

கொரோனா தடுப்பூசி நாளை போடப்படாது; கர்நாடக அரசு திடீர் அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி நாளை போடப்படாது; கர்நாடக அரசு திடீர் அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி வராத நிலையில் 18-44 வயதுக்கு உட்பட்டவர்கள் யாரும் நாளை மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டாம் என கர்நாடக சுகாதார மந்திரி கேட்டு கொண்டுள்ளார்.
பெங்களூரு, 

நாட்டில் கொரோனாவின் முதல் அலையை விட 2வது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.  கொரோனா பாதிப்புகளை தடுக்க இந்தியாவில் அவசரகால தேவைக்காக தடுப்பூசிகளை பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.

இதன்படி, கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் நாட்டில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.  பின்னர் கடந்த மார்ச் 1ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மே 1ந்தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடைய ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.  இந்தியாவிலேயே உற்பத்தியான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு அவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

இதற்காக பல்வேறு மாநிலங்களும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து தயாராகி வருகின்றன.  இந்த சூழலில், கர்நாடக சுகாதார மந்திரி டாக்டர் கே. சுதாகர் செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, மராட்டியத்தின் புனே நகரில் அமைந்துள்ள சீரம் இந்தியா நிறுவனத்திடம் 1 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசிகளை வழங்கும்படி ஆர்டர் கொடுத்திருந்தோம்.

ஆனால், கொரோனா தடுப்பூசிகளை தருவதற்கு அவர்கள் இன்னும் தயாராகவில்லை.  எனவே, நாளை தடுப்பூசி போடப்படும் என நினைத்து கொண்டு, குறிப்பிடும்படியாக 18 முதல் 44 வயதுக்கு உட்பட்ட நபர்கள் யாரும் மருத்துவமனைகளுக்கு நாளை செல்ல வேண்டாம் என கேட்டு கொள்கிறேன்.

சீரம் இந்தியா நிறுவனத்திடம் இருந்து டோஸ்கள் கிடைத்த விவரம் உறுதி செய்யப்பட்ட பின்னர் அதுபற்றி மக்களிடம் நிச்சயம் தெரிவிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. அமைச்சர்களை மட்டுமல்ல அதிகாரிகளையும் கண்காணிப்பேன் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
அமைச்சர்களை மட்டுமல்ல அதிகாரிகளையும் கண்காணிப்பேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2. ‘அரண்மனை 3’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘அரண்மனை 3’ படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
3. அசாமில் 20ந்தேதி முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும்; முதல் மந்திரி அறிவிப்பு
அசாமில் வருகிற 20ந்தேதி முதல் அனைத்து 10ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும் என முதல் மந்திரி கூறியுள்ளார்.
4. பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு.
5. உள்ளாட்சி தேர்தல் இடங்கள் பங்கீடு: தி.மு.க. கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை துரைமுருகன் அறிவிப்பு
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான இடங்கள் பங்கீடுவது குறித்து கூட்டணி கட்சியை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தி.மு.க. மாவட்ட செயலாளர்களை துரைமுருகன் அறிவுறுத்தி உள்ளார்.