கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டார் அரியானா முதல்மந்திரி


கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டார் அரியானா முதல்மந்திரி
x
தினத்தந்தி 30 April 2021 11:07 AM GMT (Updated: 30 April 2021 11:07 AM GMT)

அரியானா முதல்மந்திரி மனோகர் லால் கட்டார் இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டார்.

சண்டிகர்,

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 3 லட்சத்து 86 ஆயிரத்து 452 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 87 லட்சத்து 62 ஆயிரத்து 976 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 31 லட்சத்து 70 ஆயிரத்து 228 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரேநாளில் 2 லட்சத்து 97 ஆயிரத்து 540 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 53 லட்சத்து 84 ஆயிரத்து 418 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 3 ஆயிரத்து 498 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 8 ஆயிரத்து 330 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 15 கோடியே 22 ஆயிரத்து 45 ஆயிரத்து 179 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரியானா முதல்மந்திரி மனோகர் லால் கட்டார் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் இன்று போட்டுக்கொண்டார். 66 வயதான பாஜக மூத்த தலைவரான மனோகர் லால் கட்டார் சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் இன்று போட்டுக்கொண்டார். 

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 

பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்குவதற்கும், கொரோனா இல்லாத இந்தியாவை உருவாக்கவும் முன்வாருங்கள்.. கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் நான் இன்று எடுத்துக்கொண்டேன். மாநில மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும். உங்களை சுற்றியுள்ள மக்களையும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Next Story