தேசிய செய்திகள்

தடுப்பூசி விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிப்பதை ஏற்க முடியாது ; விநியோக கட்டுப்பாடு மத்திய அரசிடம் இருக்க வேண்டும் -சுப்ரீம் கோர்ட் + "||" + All control of vaccine distribution should be with the Central Government -Supreme Court

தடுப்பூசி விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிப்பதை ஏற்க முடியாது ; விநியோக கட்டுப்பாடு மத்திய அரசிடம் இருக்க வேண்டும் -சுப்ரீம் கோர்ட்

தடுப்பூசி விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிப்பதை ஏற்க முடியாது ; விநியோக கட்டுப்பாடு மத்திய அரசிடம் இருக்க வேண்டும் -சுப்ரீம் கோர்ட்
தடுப்பூசியின் விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிப்பதை ஏற்க முடியாது; தடுப்பூசி விநியோக கட்டுப்பாடு அனைத்தும் மத்திய அரசிடம் இருக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.
புதுடெல்லி

கொரோனா 2-வது அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மூச்சுத் திணறலால் அவதிப்படுவோருக்குத் தேவையான மருத்துவ ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கைகள் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு குறித்து 6 ஐகோர்ட்டுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் சுப்ரிம் கோர்ட்  தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு  நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், எல்.நாகேஸ்வரராவ், எஸ்.ரவீந்திர பாட் அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று காணொலி மூலம் விசாரிக்கப்பட்டது. 

அப்போத் நீதிபதிகள் கூறியதாவது:-

நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக செலுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மத்திய அரசு இந்த கடினமான சூழலில் 100 சதவீதம் தடுப்பூசிகளை வாங்கி வைக்கவில்லை தயாரிக்கவில்லை. தடுப்பூசிகளில் மத்திய அரசுக்கு ஒருவிலை, மாநில அரசுகளுக்கு ஒருவிலை என இரு விலைகள் நிர்ணயிக்கப்பட்டிருப்பது ஏன். 

தடுப்பூசியின் விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிப்பதை ஏற்க முடியாது. தனியார் நிறுவனங்கள் நிர்ணயம் செய்தால் விலை எப்படி ஒரே மாதிரியாக இருக்கும்? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி விநியோகத்தின் கட்டுப்பாடு அனைத்தும் மத்திய அரசிடம் இருக்க வேண்டும்.

கொரோனாவில் பாதிக்கப்பட்டு, அது தொடர்பாக இணையதளத்தில் ஏதேனும் உதவி கோரினால், அவர்களை அடக்கவோ, அவர்கள் வெளியிடும் தகவலை மறைக்கவோ கூடாது. சமூக வலைதளங்கள் மூலம் மக்கள் ஆக்ஸிஜன் உதவிகள் கேட்பதை மாநில அரசுகள் தடுக்க கூடாது.

கொரோனா தொற்று அதிகரித்து மக்களுக்கு சிகிச்சையளிக்க இடமில்லாவிட்டால் விடுதிகள், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை திறந்து கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றுங்கள் என கூறினர்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டிய மாநிலத்தில் ஒரே நாளில் 6.2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
மராட்டிய மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 6 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
2. சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு மண்டல வாரியாக விவரம்
சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து. மண்டல வாரியாக விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
3. மராட்டிய மாநிலத்தில் ஒரே நாளில் 5.52 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5.52 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
4. கர்நாடகத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி
கர்நாடக மாநிலத்தில் ஒரே நாளில் 10.67 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
5. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு சிறை பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை
கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட விரும்பாதவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.