கொரோனாவுக்கு உரிய சிகிச்சை வசதியின்றி பலியானோர் குடும்பங்களுக்கு ராகுல்காந்தி இரங்கல்


கொரோனாவுக்கு உரிய சிகிச்சை வசதியின்றி பலியானோர் குடும்பங்களுக்கு ராகுல்காந்தி இரங்கல்
x
தினத்தந்தி 1 May 2021 12:00 AM IST (Updated: 30 April 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று வெளியிட்ட தனது ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-

புதுடெல்லி, 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உரிய சிகிச்சை வசதியில்லாமல் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த துயரத்தில் நீங்கள் தனித்து விடப்படவில்லை. உங்களுக்காக அனைத்து மாநிலங்களிலும் பிரார்த்தனைகளும், அனுதாபங்களும் தெரிவிக்கப்படுகின்றன. நாம் அனைவரும் ஒன்று சேருவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story