மராட்டியம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவக்கம்!


மராட்டியம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவக்கம்!
x
தினத்தந்தி 1 May 2021 6:36 PM IST (Updated: 1 May 2021 6:36 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கியது.

மும்பை,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது, காட்டுத்தீ போல கட்டுக்கடங்காமல் தொடர்ந்து பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றின் இந்த இரண்டாவது அலையானது, இளம் வயதினரை அதிகளவில் குறிவைத்து தாக்கி வரும் நிலையில் மக்கள் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தற்பொழுது தடுப்பூசிகள் போடப்படும் பணிகள் நாடு முழுவதும் துவங்கி உள்ளது. 

குறிப்பாக மே ஒன்றாம் தேதி அதாவது இன்று முதல் 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு கொண்டிருக்கிறது. தடுப்பூசி தட்டுப்பாடுகள் அதிகம் காணப்படும் நிலையில், ஆன்லைன் மூலமாக பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மராட்டியம் நாக்பூரில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 9 ஆயிரத்துக்கும் அதிகமாக கொரோனா வழக்குகள் செயலில் உள்ள ஏழு மாவட்டங்களில் மட்டும் இன்று 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கி உள்ளது. அதாவது லக்னோ, கான்பூர், அலகாபாத், வாரணாசி, கோரக்பூர், மீரட் மற்றும் பரேலி ஆகிய இடங்களில் தான் தடுப்பூசி போடும் பணி துவங்கி உள்ளது. இதுவரை மாநிலத்தில் 1.23 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

Next Story