டெல்லிக்கு 2-வது ஆக்சிஜன் ரெயில் விரைவில் வருகை பியூஸ் கோயல் தகவல்


டெல்லிக்கு 2-வது ஆக்சிஜன் ரெயில் விரைவில் வருகை பியூஸ் கோயல் தகவல்
x
தினத்தந்தி 1 May 2021 5:28 PM GMT (Updated: 1 May 2021 5:28 PM GMT)

டெல்லிக்கு 2-வது ஆக்சிஜன் ரெயில் விரைவில் வருகை பியூஸ் கோயல் தகவல்

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் தினந்தோறும் ஏராளமான நோயாளிகள் இறந்து வருகின்றனர்.

எனவே வெளிமாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் தலைநகருக்கு ஆக்சிஜன் கொண்டு வரப்படுகிறது. அந்தவகையில் சத்தீஷ்காரில் இருந்து 70 டன் ஆக்சிஜனுடன் முதலாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் சமீபத்தில் டெல்லி வந்தடைந்தது.

இதைத்தொடர்ந்து மேற்கு வங்காளத்தின் துர்காபூரில் இருந்து 120 டன் மருத்துவ ஆக்சிஜனை ஏற்றிக்கொண்டு 2-வது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் விரைவில் டெல்லி வர உள்ளதாக மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்து உள்ளார். இதற்காக டேங்கர்களில் ஆக்சிஜன் நிரப்பப்பட்டு வருவதாகவும் அவர் தனது டுவிட்டர் தளத்தில் நேற்று குறிப்பிட்டு இருந்தார்.

Next Story