தேசிய செய்திகள்

மாநிலங்களிடம் 79 லட்சம் தடுப்பூசி கையிருப்பு - மத்திய அரசு அறிவிப்பு + "||" + 79 lakh vaccine stocks available to states - Central Government announcement

மாநிலங்களிடம் 79 லட்சம் தடுப்பூசி கையிருப்பு - மத்திய அரசு அறிவிப்பு

மாநிலங்களிடம் 79 லட்சம் தடுப்பூசி கையிருப்பு - மத்திய அரசு அறிவிப்பு
மாநிலங்களுக்கு மத்திய அரசு இதுவரை 16.37 கோடி தடுப்பூசிகளை வழங்கி இருப்பதாகவும், தற்சமயம் 79 லட்சம் தடுப்பூசி கையிருப்பாக உள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது.
புதுடெல்லி,

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் கடந்த ஜனவரி 16-ந் தேதி இந்தியாவில் தொடங்கியது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக இதுவரை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசானது 16 கோடியே 37 லட்சத்து 62 ஆயிரத்து 300 தடுப்பூசிகளை வழங்கி உள்ளது. அவற்றில் 15 கோடியே 58 லட்சத்து 48 ஆயிரத்து 782 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு விட்டன.

இன்னும் மாநிலங்கள் வசம் 79 லட்சத்து 13 ஆயிரத்து 518 தடுப்பூசிகள் உள்ளன. அடுத்த 3 நாளில் மேலும் 17 லட்சத்து 31 ஆயிரத்து 110 தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பி வைக்க உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

கொரோனாவின் மோசமான பாதிப்புக்குள்ளாகி உள்ள மராட்டிய மாநிலத்துக்கு, இந்த மாதத்தின் முதல் இரு வாரங்களுக்கு 17 லட்சத்து 50 ஆயிரத்து 620 கோவிஷீல்டு மற்றும் 5 லட்சத்து 76 ஆயிரத்து 890 கோவேக்சின் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் இதுவரை15 கோடியே 49 லட்சத்து 89 ஆயிரத்து 635 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

சுகாதார பணியாளர்கள் 94 லட்சத்து 12 ஆயிரத்து 140 பேர் முதல் டோசும், அவர்களில் 62 லட்சத்து 41 ஆயிரத்து 915 பேர் இரண்டாவது டோசும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

முன்கள பணியாளர்களில் 1 கோடியே 25 லட்சத்து 58 ஆயிரத்து 69 பேர் முதல் டோஸ், 68 லட்சத்து 15 ஆயிரத்து 115 பேர் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொண்டுள்ளனர்.

45-60 வயதானோரில் 5 கோடியே 27 லட்சத்து 7 ஆயிரத்து 921 பேர் முதல் டோஸ்தடுப்பூசியும், 37 லட்சத்து 74 ஆயிரத்து 930 பேர் இரண்டாவது டோஸ்தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளனர்.

60 வயதுக்கு மேற்பட்டோரில் 5 கோடியே 23 லட்சத்து 78 ஆயிரத்து 616 பேர் முதல் டோசும், 1 கோடியே 11 லட்சத்து 929 பேர் இரண்டாவது டோசும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் 67 சதவீதத்தினர் ஆவார்கள்.

நேற்று முன்தினம் மட்டுமே 27 லட்சத்து 44 ஆயிரத்து 485 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளன.