சொன்னதை நிறைவேற்றி விட்டேன்; அரசியல் வியூகப் பணியில் இருந்து விலகுகிறேன் - பிரசாந்த் கிஷோர்


சொன்னதை நிறைவேற்றி விட்டேன்; அரசியல் வியூகப் பணியில் இருந்து விலகுகிறேன் - பிரசாந்த் கிஷோர்
x
தினத்தந்தி 2 May 2021 3:36 PM IST (Updated: 2 May 2021 3:36 PM IST)
t-max-icont-min-icon

மேற்குவங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ், தமிழகத்தில் திமுக வெற்றி பெறும் சூழல் உள்ளது மகிழ்ச்சியை தருகிறது, எனினும் எனது வியூக நிபுணர் பணியில் இருந்து விலகுகிறேன் என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. ஆளும் திரிணமுல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. இந்த தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் வியூகங்களை பிரசாந்த் கிஷோர் தலைமையிலான நிறுவனம் வகுத்துக் கொடுத்தது.

இந்தநிலையில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் பிரசாந்த் கிஷோர் வியூகம் வகுத்துக் கொடுத்த மேற்குவங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ், தமிழகத்தில் திமுக வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

இதனைத் தொடர்ந்து தனியார் தொலைக்கட்சி அவர் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

மேற்குவங்கத் தேர்தலில் பாஜகவே வெற்றி பெறும் என்ற எண்ணம் கட்டமைக்கப்பட்டது. ஆனால் நான் தொடக்கத்தில் இருந்தே கூறி வந்தேன். அது தான் நடந்துள்ளது. எல்லா தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்று விடாது.

பிரதமர் மோடியின் பிரபலத்தை வைத்துக் கொண்டே எல்லாத தேர்தல்களிலும் வெற்றி பெற முடியாது. இதனை உணர்ந்து கொள்ளக் கூடாது. தமிழகத்திலும் திமுக வெற்றி பெறும் சூழல் உள்ளது. மேற்குவங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றுள்ளது. நான் கூறியபடியே பாஜக இரட்டை இலக்கத்தை தாண்டவில்லை.

இருந்தாலும் நான் அரசியல் வியூகப் பணியில் இருந்து விலகப் போகிறேன். 9 ஆண்டுகள் இந்த பணியை செய்து விட்டேன். போதும், இனிமேல் நான் எனது குடும்பத்தினருடன் பொழுதை கழிக்க உள்ளேன். எனது ஐபேக் நிறுவனத்தை அதில் உள்ள மற்ற நண்பர்கள் தொடர்ந்து நடத்துவார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story