தேசிய செய்திகள்

தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம் - அமித்ஷா டுவிட் + "||" + Will Work For The Development of TamilNadu Tweets Amith Shah

தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம் - அமித்ஷா டுவிட்

தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம் - அமித்ஷா டுவிட்
5 ஆண்டுகள் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக மக்களுக்கு முழுமனதோடு சேவை ஆற்றியுள்ளது என்று பாஜக மூத்த தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணி 75 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதனை தொடர்ந்து முக ஸ்டாலினுக்கும், திமுக கூட்டணியினருக்கும் நரேந்திர மோடி, சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாகியுள்ள நிலையில் மத்திய உள்துறை மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்ட பதிவில், 5 ஆண்டுகள் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக மக்களுக்கு முழு மனதோடு சேவை ஆற்றியுள்ளது. மக்கள் தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்வதோடு பாரத பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என தமிழக சகோதர சகோதரிகளுக்கு உறுதி அளிக்கின்றேன்’ என தெரிவித்துள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா 'நெகட்டிவ்’ வேட்பாளர்கள், முகவர்களுக்கு மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதி
மே 2-ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
2. கும்பகோணம்: ஓட்டுக்கு ரூ.2,000 என டோக்கனை வாக்காளர்களுக்கு கொடுத்து ஏமாற்றிய கும்பல்...
கும்பகோணத்தில் ஓட்டுக்கு ரூ.2,000 டோக்கனை வாக்காளர்களுக்கு கொடுத்து கும்பல் ஒன்று ஏமாற்றியுள்ளது.
3. தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு எங்கும் நடைபெறாது - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு எங்கும் நடைபெறாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
4. வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலாவின் பெயர் நீக்கம் என தகவல்
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலாவின் பெயர் நீக்கம் என தகவல் வெளியாகியுள்ளது.
5. பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக‌வசம் அணிந்துதான் வாக்களிக்க வேண்டும் - தமிழக சுகாதாரத்துறை செயலாளர்
பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக‌வசம் அணிந்துதான் வாக்களிக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.