பிரதமர் மோடி இங்கிலாந்து பிரதமருடன் நாளை ஆலோசனை
பிரதமர் மோடி இங்கிலாந்து பிரதமருடன் காணொலி காட்சி வழியே நாளை (4ந்தேதி) ஆலோசனை நடத்த உள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் நாளை (4ந்தேதி) காணொலி காட்சி வழியே முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், கடந்த 2004ம் ஆண்டில் இருந்து இந்தியா மற்றும் இங்கிலாந்து உயர்மட்ட அளவிலான நட்புறவை கொண்டுள்ளது.
உயர்மட்ட அளவிலான முக்கிய விசயங்களை சீராக பரிமாறி கொள்ளுதல் மற்றும் பல்வேறு துறைகளிலும் வளர்ந்து வரும் ஒருங்கிணைப்புகளால் அவை அடையாளப்படுத்தப்பட்டு உள்ளன.
அடுத்த 10 ஆண்டுகளுக்கு, இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு தொடர்ந்து விரிவாக்கம் அடையவும் மற்றும் வலுப்படவும் ஏற்ற வழியை ஏற்படுத்தும் வகையில் ஒரு விரிவான திட்ட அறிக்கை 2030 வெளியிடப்படும்.
இவற்றில், மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புப்படுத்தி கொள்ளுதல், வர்த்தகம் மற்றும் வளம், ராணுவம் மற்றும் பாதுகாப்பு, பருவநிலை செயல்பாடு மற்றும் சுகாதார நலம் ஆகிய 5 முக்கிய விசயங்கள் இடம் பெறும் என தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story