மேற்கு வங்க தோல்வியை அடுத்து அமித்ஷா பதவி விலகவேண்டும்; தேசியவாத காங்கிரஸ்


மேற்கு வங்க தோல்வியை அடுத்து அமித்ஷா பதவி விலகவேண்டும்; தேசியவாத காங்கிரஸ்
x
தினத்தந்தி 3 May 2021 3:26 AM IST (Updated: 3 May 2021 3:26 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்க தோல்வியை அடுத்து அமித்ஷா பதவி விலகவேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கூறியுள்ளது.

கடும் போட்டி

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜனதா கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.மம்தா பானர்ஜிக்கு எதிராக பா.ஜனதா மூத்த தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி என பா.ஜனதா மூத்த தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இருப்பினும் நேற்று வெளியான தேர்தல் முடிவில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றது.இவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

பதவி விலகவேண்டும்...

இந்தநிலையில் உள்துறை மந்திரி அமித்ஷா ராஜினாமா செய்யவேண்டும் என மேற்கு வங்க தேர்தலில் அவர் கூறிய கருத்தை மேற்கோள் காட்டி தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் நவாப் மாலிக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-

“மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வன்முறைக்கு பொறுப்பேற்று அமித்ஷா ராஜினாமா செய்யவேண்டும் என மம்தா கோரினார். இதற்கு பதில் அளித்த அமித்ஷா மக்கள் என்னிடம் கேட்டால் மட்டுமே நான் ராஜினாமா செய்வேன், என்றார்.

ஒரு ஜனநாயகத்தில் தேர்தல் என்பது தான் மக்களின் தீர்ப்பாகும். இன்று மக்கள் அவருக்கு எதிராக தீர்ப்பளித்து உள்ளனர். அமித்ஷா அவர்களே நீங்கள் எப்போது ராஜினாமா செய்யப்போகிறீர்கள்?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story