மேற்கு வங்காளம், உத்தரபிரதேசத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்; மராட்டிய அரசு உத்தரவு
மேற்கு வங்காளம், உத்தரபிரதேசத்தில் இருந்து மராட்டியத்துக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா சோதனை சான்றிதழ்
நாடு முழுவதும் 2-வது கொரோனா அலை வீசி வருகிறது. எனவே மராட்டியத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நோய் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் இருந்து மாநிலத்துக்கு வரும் பயணிகள் ஆர்.டி.-பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை சான்றிதழுடன் வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரளா, கோவா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை சான்றிதழுடன் வரவேண்டும் என ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம்இந்தநிலையில் நோய் பாதிப்பு அதிகரித்து வரும் மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசத்தில் இருந்து வரும் பயணிகளும் கட்டாயம் ஆர்.டி.-பி.சி.ஆர். சோதனை சான்றிதழுடன் வரவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மாநிலங்களில் இருந்து வரும் ரெயில் பயணிகளின் விவரங்களை கொடுக்கவும் மாநில அரசு ரெயில்வேக்கு தெரிவித்து உள்ளது.
மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தலுக்கு பிறகும், உத்தரபிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகும் தொற்று பாதிப்பு அதிகரித்து உள்ளது.