வாழ்த்துகள் மு.க.ஸ்டாலின்! தமிழக மக்களின் குரல் நீங்கள் - மு.க.ஸ்டாலினுக்கு நவ்ஜோத் சிங் சித்து வாழ்த்து
உங்கள் வெற்றி இந்தியாவின் கூட்டாட்சிக் கட்டமைப்பை பலப்படுத்தும் என்று மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமீரிந்தர்,
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. திமுக தனித்து 125 இடங்களைப் பெற்றுள்ளது. திமுக கூட்டணி 159 இடங்களைப் பெற்றுள்ளது. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 18 இடங்களையும், இடதுசாரி கட்சிகள் தலா 2 இடங்களையும், மதிமுக, விசிக தலா 4 இடங்களையும், மற்ற கட்சிகள் 4 இடங்களையும் பெற்றுள்ளன.
அறுதிப் பெரும்பான்மை பெற்றதால் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பதவி ஏற்க உள்ளார். இதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் அனைவரும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து தனது டுவிட்டர் பக்கத்தில், 'வாழ்த்துகள் மு.க.ஸ்டாலின். தமிழக மக்களின் குரல் நீங்கள். உங்கள் வெற்றி இந்தியாவின் கூட்டாட்சிக் கட்டமைப்பை பலப்படுத்தும்' என்று வாழ்த்திப் பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story