அதிகரிக்கும் கொரோனா தொற்று: இந்தியாவுக்கு மருத்துவ நிபுணர் குழுவை அனுப்பியது இத்தாலி


அதிகரிக்கும் கொரோனா தொற்று: இந்தியாவுக்கு மருத்துவ நிபுணர் குழுவை அனுப்பியது இத்தாலி
x
தினத்தந்தி 4 May 2021 2:55 AM IST (Updated: 4 May 2021 2:55 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் இந்தியாவுக்கு மருத்துவ நிபுணர் குழுவை இத்தாலி அனுப்பியது.

புதுடெல்லி,

இந்தியா கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி பரிதவித்து வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க இந்தியாவுக்கு உலக நாடுகள் பலவும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. 

அந்த வரிசையில் இத்தாலி ஆக்சிஜன் உற்பத்தி அலகு மற்றும் 20 வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களுடன், மருத்துவ நிபுணர்கள் குழுவையும் இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. இத்தாலி விமானப்படைக்கு சொந்தமான ஏ.சி.130 ரக விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழு நேற்று டெல்லி வந்தடைந்தது. 

ஒட்டுமொத்த ஆஸ்பத்திரிக்கு தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்யக்கூடிய திறன் கொண்ட இத்தாலியின் ஆக்சிஜன் உற்பத்தி அலகு நொய்டாவில் உள்ள ஐடிபிபி ஆஸ்பத்திரியில் நிறுவப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story