கொரோனா நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளும் முறை; முதல் மந்திரி கெஜ்ரிவால் ஆலோசனை


கொரோனா நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளும் முறை; முதல் மந்திரி கெஜ்ரிவால் ஆலோசனை
x
தினத்தந்தி 4 May 2021 5:02 AM IST (Updated: 4 May 2021 5:02 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளும் முறையை வலுப்படுத்துவது பற்றி முதல் மந்திரி கெஜ்ரிவால் ஆலோசனை மேற்கொண்டார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.  இந்நிலையில் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால்,
கொரோனா நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெறும் முறையை வலுப்படுத்துவது பற்றி அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் ஒன்றை நடத்தி ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில், துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா, தலைமை செயலாளர், சுகாதார முதன்மை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், கொரோனா நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெறும் முறையை வலுப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.  இதனால், சரியான நேரத்தில் நோயாளிகளுக்கு கவுன்சிலிங் வழங்கப்படும்.  நல்ல சிகிச்சை கிடைக்கும்.  அவர்களுடன் தொடர்பிலும் இருக்க முடியும் என கூறியுள்ளார். 

இதேபோன்று எத்தனை கொரோனா நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்கிறார்கள்? எத்தனை பேருக்கு வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்கப்படுகிறது என்பது பற்றிய தெளிவான பதிவுகள் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.




Next Story