தேசிய செய்திகள்

நன்கொடையாக பெறப்பட்ட கொரோனா நிவாரண பொருள் இறக்குமதிக்கு ஜி.எஸ்.டி. ரத்து; மத்திய அரசு உத்தரவு + "||" + GST on import of donated corona relief material Cancellation; Central Government Order

நன்கொடையாக பெறப்பட்ட கொரோனா நிவாரண பொருள் இறக்குமதிக்கு ஜி.எஸ்.டி. ரத்து; மத்திய அரசு உத்தரவு

நன்கொடையாக பெறப்பட்ட கொரோனா நிவாரண பொருள் இறக்குமதிக்கு ஜி.எஸ்.டி. ரத்து; மத்திய அரசு உத்தரவு
வெளிநாடுகளில் இருந்து நன்கொடையாக திரட்டப்பட்ட கொரோனா நிவாரண பொருட்களை இந்தியாவில் இலவசமாக வினியோகிப்பதற்காக இறக்குமதி செய்வதற்கு ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 30-ந் தேதிவரை, இந்த விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பல்வேறு தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள், நிவாரண பணியில் ஈடுபடும் கார்ப்பரேட் அமைப்புகள் ஆகியவற்றின் கோரிக்கையை ஏற்று ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரத்து செய்யப்படுவதாக கூறியுள்ளது.

அதன்படி, இந்தியாவில் இலவசமாக கொரோனா நிவாரண பொருட்களை வினியோகம் செய்ய அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள், சட்டரீதியான அமைப்புகள் மற்றும் மாநில அரசுகள் இந்த பொருட்களை ஜி.எஸ்.டி. செலுத்தாமல் இலவசமாக இறக்குமதி செய்யலாம் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.