கொரோனா பாதிப்பு உயர்வு: ஆந்திர பிரதேசத்தில் வரும் 18ந்தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு


கொரோனா பாதிப்பு உயர்வு:  ஆந்திர பிரதேசத்தில் வரும் 18ந்தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு
x
தினத்தந்தி 4 May 2021 10:42 PM GMT (Updated: 4 May 2021 10:42 PM GMT)

ஆந்திர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு உயர்வை முன்னிட்டு வரும் 18ந்தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

அமராவதி,

ஆந்திர பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சீராக உயர்ந்து வருகிறது.  கடந்த 24 மணிநேரத்தில் 20,034 பேர் பாதிப்படைந்தும், 82 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.  இதனால் மொத்த பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 11,84,028 ஆகவும், மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,289 ஆகவும் உள்ளது.

இதனையடுத்து தலைமை செயலாளர் அனில் குமார் சிங்கால் ஒப்புதலுடனான உத்தரவின்படி இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை பொது முடக்கம் அமலில் இருக்கும்.  வரும் 18ந்தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த காலகட்டத்தில் அனைத்து நிறுவனங்கள், கடைகள், அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், உணவு விடுதிகள் உள்ளிட்டவை இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை மூடப்படும்.

எனினும் மருத்துவமனைகள், பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள் மற்றும் குறிப்பிட்ட அத்தியாவசிய சேவை வினியோகத்திற்கு தடை இருக்காது.  144 தடை உத்தரவின் கீழ் 5 பேருக்கு மேல் ஒன்றாக சேர்ந்து செல்ல கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story