தேசிய செய்திகள்

ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம் + "||" + Deaths due to lack of oxygen no less than a ‘genocide’, says Allahabad HC

ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்

ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட்  கண்டனம்
ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சற்றும் குறையாதது என்று அலகாபாத் ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
அலாகாபாத்

உத்தரப்பிரதேசத்தின் தலைநகர் லக்னோ மற்றும் மீரட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் உயிரிழந்தது குறித்து ஊடகங்களில் வெளியான செய்தி அடிப்படையில் அலகாபாத் ஐகோர்ட்  தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.

ஆக்சிஜன் சிலிண்டர்களை கொள்முதல் செய்து மருத்துவமனைகளுக்கு வினியோகிக்கும் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள், இனப்படுகொலைக்கு சற்றும் குறையாத குற்றம் இழைத்துள்ளதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து லக்னோ, மீரட் மாவட்ட கலெக்டர்கள் 48 மணி நேரத்தில் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டனர்.