கொரோனா பாதிப்புகளால் வரும் வாரங்களில் இந்தியாவின் இறப்பு விகிதம் இரட்டிப்பாகும் - நிபுணர்கள் எச்சரிக்கை
கொரோனா பாதிப்புகளால் வரும் வாரங்களில் இந்தியாவின் இறப்பு விகிதம் இரட்டிப்பாகும் என்று கொரோனா முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்து உள்ளனர்.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை, கட்டுக்கடங்காமல் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. கடந்த 1-ந் தேதி பாதிப்பு 4 லட்சத்தைத் தாண்டி பதிவானது உலகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் 2-ந் தேதியில் இருந்து தொடர்ந்து பரவல் குறைந்து வருகிறது.
2-ந் தேதி 3 லட்சத்து 92 ஆயிரத்து 488 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. 3-ந் தேதி இது 3 லட்சத்து 68 ஆயிரத்து 147 ஆக பதிவானது. நேற்று (4-ந் தேதி) இது, 3 லட்சத்து 57 ஆயிரத்து 229 ஆக பதிவானது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் செய்தியாக இருந்தது. ஆனால், இன்று கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 82 ஆயிரத்து 315- பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 3 லட்சத்து 38 ஆயிரத்து 439- பேர் ஒரே நாளில் குணம் அடைந்துள்ளனர். எனினும் கவலை அளிக்கும் விஷயமாக தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 3,780- பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 06 லட்சத்து 65 ஆயிரத்து 148- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 1 கோடியே 69 லட்சத்து 51 ஆயிரத்து 731- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் 2 லட்சத்து 26 ஆயிரத்து 188- பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 34 லட்சத்து 87 ஆயிரத்து 229- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகின் மிகப்பெரிய சுகாதார நெருக்கடியில் இந்தியாவை மூழ்கடித்த கொரோனா வைரஸ் அலை வரவிருக்கும் வாரங்களில் மோசமடைய வாய்ப்புள்ளது, சில ஆய்வு தகவல்கள் இறப்பு எண்ணிக்கை தற்போதைய நிலைகளிலிருந்து இரு மடங்கிற்கும் அதிகமாக இருக்கும் என்று கணித்துள்ளன.
தற்போதைய நிலை தொடர்ந்தால் ஜூன் 11 க்குள் சுமார் 404,000 இறப்புகள் ஏற்படும் என பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழக குழு கணித மாதிரியைப் பயன்படுத்தி கணித்து உள்ளது. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் ஒரு ஆய்வு ஜூலை இறுதிக்குள் 1,018,879 இறப்புகள் ஏற்படும் என கணித்துள்ளது.
கொரோனா வைரஸ் பதிப்புகளை கணிப்பது கடினம் என்றாலும், குறிப்பாக இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில், கணிப்புகள் இந்தியா பொது சுகாதார நடவடிக்கைகளை பரி சோதனை மற்றும் சமூக இடைவெளி போன்ற நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டிய அவசியத்தை பிரதிபலிக்கிறது. மோசமான மதிப்பீடுகள் தவிர்க்கப்பட்டாலும், உலகின் மிகப்பெரிய கொரோனா இறப்பு எண்ணிக்கையால் இந்தியா பாதிக்கக்கூடும். அமெரிக்கா தற்போது அதிக எண்ணிக்கையிலான இறப்புகளை (578,000) கொண்டு உள்ளது.
பிரவுன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் டீன் ஆஷிஷ் ஜா கூறும் போது
அடுத்த நான்கு முதல் ஆறு வாரங்கள் இந்தியாவுக்கு மிகவும் கடினமாக இருக்கும்.
அடுத்த நான்கு முதல் ஆறு வாரங்கள் இந்தியாவுக்கு மிகவும் கடினமாக இருக்கும்.
ஒட்டுமொத்த நேர்மறை விகிதம் இப்போது இந்தியாவில் 20 சதவீதமாக உள்ளது, நாட்டின் சில பகுதிகளில் இது 40 சதவீதமாக உள்ளது, இது அதிர்ச்சியூட்டும் வகையில் அதிக எண்ணிக்கையில் மூன்றில் நான்கில் ஒரு பங்கு தொற்றுநோயாளிகள் தவறவிடப்படுவதைக் குறிக்கிறது என்று ஜா கூறினார்.
சுகாதார ஆராய்ச்சியாளர்களைப் பொறுத்தவரை, ஒரு முக்கிய கவலை என்னவென்றால் கொரோனா வைரஸ் பரிசோதனையின் பற்றாக்குறை ஆகும், இது பல விஞ்ஞானிகள் பாதிப்புகளின் கூர்மையான எண்ணிக்கையை ஏற்படுத்துவதாக நம்புகின்றனர்.
15 நாள் ஊரடங்கு இறப்புகளை 300,000 ஆகக் குறைக்ககூடும், 30 நாள் ஊரடங்கு 285,000 ஆகக் குறைக்கும்என்று இந்திய அறிவியல் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
தடுப்பூசிகள் ஆபத்துக்களை அகற்றுவதற்கான பெரிய வழியாக இருக்கும், இருப்பினும் அது அனைவருக்கும் கிடைக்க நேரம் எடுக்கும் என்று பொது சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஒருவருக்கு தடுப்பூசி போட்ட பிறகு நோய் எதிர்ப்பு சக்தி உருவாக பல வாரங்கள் ஆகும். இரண்டு டோஸ்கள் தேவைப்படுபவர்களுடன் ஒப்பிடும் போது இந்த செயல்முறை இன்னும் நீடிக்கும். இந்த செயல்முறையை ஆறு வாரங்கள் முதல் இரண்டு மாதங்கள் வரை நீட்டிக்கிறது.
Related Tags :
Next Story