வெளிநாடுகள் இந்தியாவுக்கு வழங்கும் உதவிகள் தொடர்பாக வெளிப்படைத்தன்மை இல்லாதது ஏன்? - ராகுல்காந்தி கேள்வி


வெளிநாடுகள் இந்தியாவுக்கு வழங்கும் உதவிகள் தொடர்பாக வெளிப்படைத்தன்மை இல்லாதது ஏன்? - ராகுல்காந்தி கேள்வி
x
தினத்தந்தி 5 May 2021 7:13 PM IST (Updated: 5 May 2021 7:13 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக வெளிநாடுகள் இந்தியாவுக்கு வழங்கும் உதவிகள் தொடர்பாக வெளிப்படைத்தன்மை இல்லாதது ஏன்? என்று மத்திய அரசுக்கு ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால், பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன், தடுப்பூசி, மருந்து உள்ளிட்டவற்றிற்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதனை தொடர்ந்து அமெரிக்கா, ரஷியா உள்பட உலகின் பல நாடுகள் இந்தியாவுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள், மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த நிவாரண பொருட்கள் மத்திய அரசு மூலம் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக வெளிநாடுகள் வழங்கி வரும் உதவிகள் தொடர்பாக வெளிப்படைத்தன்மை இல்லாதது ஏன்? என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ராகுல்காந்தி இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

இந்தியாவுக்கு வெளிநாடுகள் வழங்கிய கொரோனா நிவாரணம் தொடர்பான கேள்விகள்:-

* என்னென்ன நிவாரண பொருட்களை இந்தியா பெற்றுள்ளது?

* அந்த நிவாரண பொருட்கள் எங்கு உள்ளன?

* அந்த நிவாரண பொருட்களால் பயனடைந்தவர்கள் யார்?

* அந்த நிவாரண பொருட்கள் மாநிலங்களுக்கு எதன் அடிப்படையில் ஒதுக்கப்பட்டது?

* இதில் வெளிப்படைத்தன்மை இல்லாதது ஏன்?

* மத்திய அரசிடம் இதற்கு பதில் உள்ளதா?

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பின்னதாக ராகுல்காந்தி வெளியிட்ட மற்றொரு டுவிட்டர் பதிவில், தடுப்பூசியும் இல்லை வேலைவாய்ப்பும் இல்லை. கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் பாதிப்பை மக்கள் எதிர்கொள்கின்றனர். மோடி அரசு முழுமையாக தோல்வியடைந்துவிட்டது’ என தெரிவித்துள்ளார்.



Next Story