மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 57 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து 'டிஸ்சார்ஜ்’
மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 57 ஆயிரத்து 006 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்.
மும்பை,
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, மராட்டியத்தில் உச்சமடைந்திருந்த கொரோனா தற்போது மெல்லமெல்ல குறையத்தொடங்கியுள்ளது. இந்நிலையில், மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பரவலின் இன்றைய நிலவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 57 ஆயிரத்து 640 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 48 லட்சத்து 80 ஆயிரத்து 542 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 லட்சத்து 41 ஆயிரத்து 596 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 57 ஆயிரத்து 006 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், மராட்டியத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 41 ஆயிரத்து 64 ஆயிரத்து 98 ஆக அதிகரித்துள்ளது.
ஆனால், மராட்டியத்தில் கொரோனா தாக்குதலுக்கு இன்று ஒரேநாளில் 920 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அம்மாநிலத்தில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 72 ஆயிரத்து 662 ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story