கொரோனா 2-வது அலை: சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற இடைத்தேர்தல் ஒத்திவைப்பு


கொரோனா 2-வது அலை: சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற இடைத்தேர்தல் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 5 May 2021 9:28 PM IST (Updated: 5 May 2021 9:28 PM IST)
t-max-icont-min-icon

பல்வேறு மாநிலங்களில் நடைபெறவிருந்த சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற இடைத்தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்  3.82 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகை உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 06 லட்சத்து 65 ஆயிரத்தை கடந்தது. 34.87 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2,26,188 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மருத்துவ நிபுணர்கள் பலரும், 'கொரோனா பரவலை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கை அமல் படுத்த வேண்டும்' என, வலியுறுத்திவருகின்றனர்.

இந்தநிலையில்,  பல்வேறு மாநிலங்களில் நடைபெறவிருந்த சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற இடைத்தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும்  கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Next Story