ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் கர்நாடகத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 50,112 பேருக்கு கொரோனா 346 பேர் பலியானதால் அதிர்ச்சி


ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் கர்நாடகத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 50,112 பேருக்கு கொரோனா 346 பேர் பலியானதால் அதிர்ச்சி
x
தினத்தந்தி 6 May 2021 12:34 AM IST (Updated: 6 May 2021 12:34 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 50,112 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 346 பேர் இறந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பெங்களூரு:
கர்நாடகத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 50,112 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 346 பேர் இறந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா புதிய உச்சம்
கர்நாடக மாநிலத்தில் கொரோனா 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் சுமார் 44 ஆயிரம் பேருக்கு தொற்று பரவி இருந்தது. 
இந்த நிலையில் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 112 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இது புதிய உச்சமாகும். வைரஸ் தொற்றுக்கு மேலும் 346 பேர் உயரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நேற்றைய பாதிப்பு குறித்து கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஒரே நாளில் 346 பேர் பலி
கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 55 ஆயிரத்து 224 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 50 ஆயிரத்து 112 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.
இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 17 லட்சத்து 41 ஆயிரத்து 46 ஆக அதிகரித்துள்ளது. 
மேலும் வைரஸ் தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் 346 பேர் உயிரிழந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 884 ஆக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் நேற்று ஒரே நாளில் 26 ஆயிரத்து 841 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 36 ஆயிரத்து 854 ஆனது. ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 87 ஆயிரத்து 288 ஆக உள்ளது. 
பெங்களூருவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 23 ஆயிரத்து 106 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தாவணகெரேயில் 548 பேர்
பெங்களூரு புறநகரில் 1,033 பேர், பாகல்கோட்டையில் 719 பேர், பல்லாரியில் 927 பேர், பெலகாவியில் 920 பேர், பீதரில் 482 பேர், சாம்ராஜ்நகரில் 542 பேர், சிக்பள்ளாப்பூரில் 830 பேர், சிக்கமகளூருவில் 1,009 பேர், சித்ரதுர்காவில் 152 பேர், தட்சிண கன்னடாவில் 1,529 பேர், தாவணகெரேயில் 548 பேர், தார்வாரில் 1,030 பேர், கதக்கில் 189 பேர், ஹாசனில் 1,604 பேர், ஹாவேரியில் 224 பேர், கலபுரகியில் 1,097 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் குடகில் 768 பேர், கோலாரில் 1,115 பேர், கொப்பலில் 182 பேர், மண்டியாவில் 1,621 பேர், மைசூருவில் 2,790 பேர், ராய்ச்சூரில் 427 பேர், ராமநகரில் 475 பேர், சிவமொக்காவில் 702 பேர், துமகூருவில் 2,335 பேர், உடுப்பியில் 1,655 பேர், உத்தரகன்னடாவில் 849 பேர், விஜயாப்புராவில் 513 பேர், யாதகிரியில் 739 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிர்ச்சியில் அரசு
கொரோனாவுக்கு நேற்று பெங்களூரு நகரில் 161 பேர் பலியாகி உள்ளனர். பல்லாரியில் 19 பேர், பெலகாவியில் 2 பேர், பெங்களூரு புறநகரில் 5 பேர், பீதரில் 8 பேர், சாம்ராஜ்நகரில் 5 பேர் இறந்துள்ளனர்.
துமகூருவில் 12 பேரும், சிவமொக்காவில் 15 பேரும், ஹாசனில் 11 பேரும், ராமநகரில் 2 பேரும், பாகல்கோட்டையில் 3 பேரும், சிக்பள்ளாப்பூரில் 5 பேரும், தார்வாரில் 8 பேரும், ஹாவேரியில் 4 பேரும், கலபுரகியில் 15 பேரும், மைசூருவில் 10 பேரும், விஜயாப்புராவில் 4 பேரும், மண்டியாவில் 19 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 346 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதே நிலை தொடர்ந்தால், அடுத்து வரும் நாட்களில் பெங்களூருவில் சுகாதார நெருக்கடி நிலை ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 
கர்நாடகத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் புதிய உச்சமாக 50, 112 பேர் பாதிக்கப்பட்டுள்ளது அரசையும், சுகாதாரத் துறையையும்  அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

Next Story